தமிழ் துவள் யின் அர்த்தம்

துவள்

வினைச்சொல்துவள, துவண்டு

 • 1

  (செடி, கொடி முதலியவை) விறைப்பு இழந்து வளைதல்; தளர்தல்.

  ‘மழை பெய்யாததால் செடி கொடிகள் துவண்டு கிடந்தன’

 • 2

  (உடல் உறுப்புகள்) பலம் இழந்து சோர்தல்.

  ‘நான்கு நாள் காய்ச்சலில் கைகால்கள் துவண்டுவிட்டன’

 • 3

  (தோல்வி, அவமானம் போன்றவற்றால்) உள்ளம் வருந்துதல்; செயலற்றுவிடுதல்.

  ‘அவர் தாங்க முடியாத துயரத்தில் துவண்டுபோனார்’
  ‘அவர் தோல்வியைக் கண்டு துவளாதவர்’