தமிழ் துவாரம் யின் அர்த்தம்

துவாரம்

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அல்லது உடலின் உறுப்புகளில் அமைந்திருக்கும்) துளை.

  ‘சுவரில் இருந்த துவாரத்தைச் சுண்ணாம்பு வைத்து அடைத்தான்’
  ‘சருமத் துவாரம்’
  ‘நாசித் துவாரம்’

 • 2

  (சில சாதனங்களில் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்) ஓட்டை.

  ‘சாவித் துவாரம்’
  ‘இடியாப்ப அச்சில் உள்ள தகட்டில் துவாரங்கள் பெரிதாக இருக்கக் கூடாது’