துவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துவை1துவை2

துவை1

வினைச்சொல்துவைய, துவைந்து, துவைக்க, துவைத்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (நெற்பயிரின் தாள் மிதிக்கப்பட்டு) துவளுதல்/(மாவு முதலியவை) குழைதல்.

  ‘சூட்டடிப்பில் தாள் துவைந்ததும் எடுத்து உதறிப் போடுவார்கள்’
  ‘மாவு இன்னும் துவையட்டும்’

துவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துவை1துவை2

துவை2

வினைச்சொல்துவைய, துவைந்து, துவைக்க, துவைத்து

 • 1

  (துணிகளைத் தண்ணீரில் நனைத்து அல்லது கசக்கி) அழுக்கு நீக்குதல்.

  ‘துணி துவைக்கும் கல்’
  ‘பட்டுச் சேலையை அடித்துத் துவைக்காமல் அலசி எடுக்க வேண்டும்’
  ‘துணி துவைக்கும் இயந்திரம் கெட்டுப்போய்விட்டது’

 • 2

  வட்டார வழக்கு (உடம்பு துவள) அடித்தல்; உதைத்தல்.

  ‘அவனைக் கூட்டிக்கொண்டுபோய்த் துவைத்து அனுப்பிவிட்டார்கள்’