தமிழ் தூக்கம் யின் அர்த்தம்

தூக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை; உறக்கம்.

  ‘உனக்குத் தூக்கம் வந்தால் நீ போய்ப் படு’
  ‘வயதாகிவிட்டதால் இரவில் தூக்கம் வருவதில்லை’
  ‘பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் இன்னும் என்ன தூக்கம்?’
  ‘இப்போதெல்லாம் இரவில் வேலை பகலில் தூக்கம் என்பது சாதாரணமாகிவிட்டது’