தமிழ் தூக்கி யின் அர்த்தம்

தூக்கி

வினையடை

  • 1

    உயரத்தில் செல்லுமாறு; சற்று உயர்த்தி.

    ‘வலையில் படாமலிருக்கப் பந்தைச் சற்று மேலே தூக்கிப் போடு’
    ‘விளக்கைச் சற்றுத் தூக்கிப் பிடி’
    ‘வேகமாக வந்த பந்தைத் தூக்கி அடித்ததும் அது எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது’