தமிழ் தூக்கிவாரிப்போடு யின் அர்த்தம்

தூக்கிவாரிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்) (ஒரு நிகழ்ச்சியின் அல்லது செய்தியின்) எதிர்பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல்.

    ‘நண்பர் போன ரயில் விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது’