தமிழ் தூக்கி நிறுத்து யின் அர்த்தம்

தூக்கி நிறுத்து

வினைச்சொல்நிறுத்த, நிறுத்தி

  • 1

    சரிவு நிலையைத் தடுத்து ஒரு மேன்மையான நிலைக்குக் கொண்டுவருதல்.

    ‘கடனில் மூழ்கியிருக்கும் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான கடைசி முயற்சிதான் இது’
    ‘திரைக்கதையில் தொய்வு இருந்தாலும் பாடல்கள் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன’
    ‘சமீபத்திய இடைத்தேர்தல் வெற்றி இந்தக் கட்சியைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது’