தமிழ் தூங்கிவழி யின் அர்த்தம்

தூங்கிவழி

வினைச்சொல்-வழிய, -வழிந்து

 • 1

  தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல்; தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருத்தல்.

  ‘பையன் ஏழு மணிக்கே தூங்கிவழிய ஆரம்பித்துவிட்டானே!’
  ‘நாற்காலியில் தூங்கிவழியாமல் உள்ளே போய்ப் படுங்கள்’

 • 2

  (ஒருவர்) சுறுசுறுப்புக் காட்டாமல் இருத்தல்; (ஓர் இடம்) அதிக வேலைகள் இல்லாமல் மந்தமாகக் காணப்படுதல்.

  ‘தூங்கிவழியாமல் கல்யாண வேலைகளைக் கவனி’
  ‘அலுவலகம் தூங்கிவழிகிறது’