தமிழ் தூண் யின் அர்த்தம்

தூண்

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டடம், பாலம் முதலியவற்றில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு) மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.

  ‘தற்காலக் கட்டடங்களில் தூண் வைத்துக் கட்டுவது குறைந்துவிட்டது’
  ‘அவர் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்’
  ‘இரண்டு பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்குப் பெரிய தூண் இது’
  உரு வழக்கு ‘இவர் அந்தக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவர்’