தமிழ் தூண்டித்துருவு யின் அர்த்தம்

தூண்டித்துருவு

வினைச்சொல்-துருவ, -துருவி

  • 1

    விவரங்களை நுணுக்கமாக விசாரித்து அறிய முற்படுதல்.

    ‘அந்தப் பண விஷயத்தை அப்படியே விட்டுவிடு. ரொம்பத் தூண்டித்துருவாதே’
    ‘புதிதாக வந்துள்ள அதிகாரி எல்லாவற்றையும் தூண்டித்துருவிப் பார்க்கிறார்’
    ‘நானும் அவனைத் தூண்டித்துருவிக் கேட்டுப் பார்த்துவிட்டேன். அவன் எதையுமே சொல்ல மாட்டேன் என்கிறான்’