தமிழ் தூண்டில் போடு யின் அர்த்தம்

தூண்டில் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (தன்னுடைய நோக்கம், திட்டம் போன்றவற்றுக்கு மற்றவரை இணங்கவைக்கும் நோக்கத்தோடு ஒருவருக்கு ஆசைகாட்டி) சிக்கவைக்க முயலுதல்.

    ‘மக்களுக்குத் தூண்டில் போட்டுச் சீட்டில் சேர்த்த நிறுவனங்களில் பல பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டன’
    ‘பணக்காரப் பெண்ணுக்குத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது?’