தமிழ் தூண்டு யின் அர்த்தம்
தூண்டு
வினைச்சொல்
- 1
(சுடர்விட்டு நன்றாக எரிவதற்காக விளக்கின் திரியை) முன்னால் தள்ளுதல்.
‘திரியைச் சற்றுத் தூண்டி எண்ணெய் ஊற்றியதும் விளக்கு பிரகாசமாக எரிந்தது’ - 2
(ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான) உள்ளுணர்வை ஏற்படுத்துதல்.
‘என்னைச் சுற்றி நிகழும் அன்றாட நிகழ்ச்சிகளே என்னை எழுதத் தூண்டின’‘சம்பளப் பற்றாக்குறை தொழிலாளர்களைப் போராடத் தூண்டியுள்ளது’‘இயல்பாக என்னுள் இருக்கும் இரக்கம் என்னைச் சமூக சேவை செய்யத் தூண்டியது’‘பழிவாங்கும் எண்ணமே அவனைக் கொலை செய்யத் தூண்டியது’ - 3
(நரம்புகளை) கிளர்ச்சியுறச் செய்தல்.
‘போதைப் பொருள்கள் நரம்புகளைத் தூண்டி உடல் நலத்தைக் கெடுக்கின்றன’