தமிழ் தூண்டுதல் யின் அர்த்தம்

தூண்டுதல்

பெயர்ச்சொல்

  • 1

    உந்துதல்.

    ‘நான் சிற்பக் கலையைக் கற்க என் அண்ணன் தூண்டுதலாக இருந்தார்’
    ‘தான் இந்தக் கதையை எழுதத் தூண்டுதலாக இருந்த சம்பவத்தைப் பற்றி நண்பர் கூறத் தொடங்கினார்’
    ‘மேலிடத்தின் தூண்டுதலின் பேரிலேயே தாம் இதைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்’