தமிழ் தூது யின் அர்த்தம்

தூது

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு) செய்தி தெரிவிக்கும் பணி.

  ‘தாக்குப்பிடிக்க முடியாமல் எதிரிப் படையினர் சமாதானத் தூது அனுப்பினார்கள்’
  ‘சொத்தைப் பிரித்துத் தர வேண்டும் என்று என் மகன் உங்களைத் தூது அனுப்பியிருக்கிறானா?’
  ‘கவிஞர் இந்தக் கவிதையில் காற்றைத் தன் காதலிக்குத் தூதாக அனுப்புகிறார்’

 • 2

  ஒரு பெண் தன் காதலனுக்குத் தூது அனுப்பும் முறையில் இயற்றப்பட்ட ஒரு சிற்றிலக்கிய வகை.