தமிழ் தூபம்போடு யின் அர்த்தம்

தூபம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (தீய விளைவுக்குக் காரணமாகும் வகையில் ஒரு உணர்வை) தூண்டிவிடுதல்.

    ‘சொத்தைப் பிரிக்கச் சொல்லி உன் கணவன் தூபம்போடுகிறானா?’
    ‘இனப் பிரிவினைக்குத் தூபம்போடுவது நாட்டைப் பிளவுபடுத்தும்’
    ‘இந்தத் திரைப்படம் வன்முறைக்குத் தூபம்போடுவதாக இருக்கிறது’