தமிழ் தூய யின் அர்த்தம்

தூய

பெயரடை

 • 1

  (உணர்வு, சிந்தனை போன்றவற்றைக் குறிக்கும்போது) சற்றும் மாசுபடாத; களங்கமற்ற.

  ‘தூய அன்பு’
  ‘தூய எண்ணம்’

 • 2

  (மொழியைக் குறிக்கும்போது) பிற மொழிச் சொற்களின் கலப்பற்ற.

  ‘தூய தமிழ்’

 • 3

  கிறித்தவ வழக்கு
  புனிதத் தன்மை கொண்ட; புனித.

  ‘தூய அந்தோணியார்’