தமிழ் தூய்மை யின் அர்த்தம்
தூய்மை
பெயர்ச்சொல்
- 1
அழுக்கு நீங்கிய அல்லது இல்லாத நிலை; சுத்தம்.
‘அவர் எப்போதும் தூய்மையான கதர் ஆடையையே அணிவார்’‘வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்’‘நகரங்களில் தூய்மையான காற்றுக்கு எங்கே போவது?’உரு வழக்கு ‘மனத் தூய்மை’ - 2
முறைகேடற்ற நிலை; நேர்மை.
‘தூய்மையான ஆட்சி அமைப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்கள்’‘நீதித் துறையின் தூய்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்’ - 3
கலப்பற்றது.
‘தூய்மையான தங்கம்’