தமிழ் தூரம் யின் அர்த்தம்

தூரம்

பெயர்ச்சொல்

 • 1

  தொலைவு.

  ‘நீ போக வேண்டிய இடம் இங்கிருந்து எவ்வளவு தூரம்?’
  ‘கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்வெளி’
  ‘எவ்வளவு தூரத்தில் உங்கள் வீடு உள்ளது?’

 • 2

  (பெரும்பாலும் அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் பின் வரும்போது) அளவு.

  ‘நீங்கள் இப்படிச் சொல்வது எவ்வளவு தூரம் சரி என்று யோசிக்க வேண்டும்’

 • 3

  (‘தூரத்து’ என்ற வடிவம் மட்டும்) (உறவில்) நெருக்கமானதாக, நெருங்கியதாக அமையாதது.

  ‘அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம்’

 • 4

  ‘மாதவிடாய்’ என்பதை மறைமுகமாகக் குறிப்பிடும் சொல்.