தமிழ் தூள் யின் அர்த்தம்

தூள்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பொருள்) மாவாக அல்லது சிறு துகள்களாக இருக்கும் நிலை.

  ‘காப்பித் தூள்’
  ‘மிளகாய்த் தூள்’
  ‘கண்ணாடித் தூளைக் கூட்டி இடத்தைச் சுத்தம்செய்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு மிகச் சிறிதாக அல்லது பொடியாக இருப்பது.

  ‘தூள் மீன்’
  ‘தூள் விறகு’