தமிழ் தூள்கிளப்பு யின் அர்த்தம்

தூள்கிளப்பு

வினைச்சொல்-கிளப்ப, -கிளப்பி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாராட்டாகக் கூறும்போது) திறமை சிறப்பாக வெளிப்படுகிற வகையில் ஒன்றைச் செய்தல் அல்லது நிகழ்த்துதல்.

    ‘கதாநாயகனாக நடித்தவர் தூள்கிளப்பியிருக்கிறார்’
    ‘இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தூள்கிளப்பிவிட்டார்’