தமிழ் தூவு யின் அர்த்தம்

தூவு

வினைச்சொல்தூவ, தூவி

  • 1

    (பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை) பரவலாக விழச் செய்தல்.

    ‘சிவனுக்கு மலர் தூவி வழிபட்டார்’
    ‘நிலத்தைப் பண்படுத்திய பிறகே விதை தூவ வேண்டும்’
    ‘மேகத்தின் மீது விமானம்மூலம் ஒரு வகை வேதிப்பொருளைத் தூவிச் செயற்கை மழை உண்டாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’