தமிழ் தெண்டி யின் அர்த்தம்

தெண்டி

வினைச்சொல்தெண்டிக்க, தெண்டித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு முயலுதல்; முயற்சிசெய்தல்.

  ‘என்னால் முடிந்த அளவுக்குத் தெண்டித்துப்பார்க்கிறேன்’
  ‘எவ்வளவோ தெண்டித்தும் அந்தக் காரியம் நிறைவேறவில்லை’
  ‘அவளிடம் தெண்டித்துப் பார்த்துவிட்டேன். அவள் கடைசி வரை சம்மதிக்கவேயில்லை’
  ‘அவர் தெண்டித்ததால்தான் திருவிழா நன்றாக நடந்தது’