தமிழ் தென்படு யின் அர்த்தம்

தென்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (கண்ணுக்கு) புலப்படுதல்; பார்வையில் படுதல்.

  ‘வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே நண்பன் ஒருவன் தென்பட்டான்’
  ‘அந்தச் சாலையில் தென்பட்டவையெல்லாம் வாகனங்கள்தான்’

 • 2

  (ஒரு நிலை, உணர்ச்சி போன்றவை உணரக்கூடிய அல்லது அறியக்கூடிய வகையில்) தோன்றுதல்; தெரிதல்.

  ‘ஊருக்குப் போய்வந்ததால் அவன் முகத்தில் உற்சாகம் தென்பட்டது’
  ‘பிரச்சினை சுமுகமாக முடிவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை’