தமிழ் தெப்பம் யின் அர்த்தம்

தெப்பம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஆறு, ஏரி முதலியவற்றில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும்) பெரிய கூடை போன்ற தோணி.

 • 2

  (கோயில் உற்சவத்தில்) விக்கிரகத்தை வைத்துத் தெப்பக்குளத்தில் நான்கு பக்கமும் சுற்றிவருவதற்காக அமைக்கப்பட்ட அலங்கார மிதவை.

  ‘தெப்பம் பார்க்க ஊரே திரண்டிருந்தது’

 • 3

  தெப்போற்சவம்.

 • 4

  குளம்.

  ‘தெப்பத்தில் குளிக்கப் போனான்’