தமிழ் தெம்பு யின் அர்த்தம்

தெம்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவர் செயல்படுவதற்குத் தேவையான) உடல் பலம்; சக்தி.

  ‘காய்ச்சல் அதிகமாகி நடக்கக்கூடத் தெம்பில்லாமல் முடங்கிக்கிடந்தான்’
  ‘காப்பி குடித்த பிறகு சற்றுத் தெம்பாக இருந்தது’

 • 2

  பேச்சு வழக்கு (மன) வலிமை; திடம்.

  ‘அவர்களுக்கு அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் தெம்பு இல்லை’
  ‘உங்கள் பேச்சு மனத்திற்குத் தெம்பைத் தருகிறது’
  ‘அவனிடமிருந்து தெம்பான குரலில் பதில் வந்தது’