தமிழ் தெரிவி யின் அர்த்தம்

தெரிவி

வினைச்சொல்தெரிவிக்க, தெரிவித்து

 • 1

  (ஒரு செய்தியைப் பேச்சால், எழுத்தால் ஒருவருக்கு) அறிவித்தல்; (ஒன்றை) வெளிப்படுத்துதல்.

  ‘எந்தக் கருத்தையும் தெரிவிக்க நமக்கு உரிமை உண்டு’
  ‘நாளை விடுமுறை என்பதை ஒருவரும் தெரிவிக்கவில்லை’
  ‘அம்மா இறந்த செய்தியை உறவினருக்கெல்லாம் ஆட்களை அனுப்பித் தெரிவித்தோம்’

 • 2

  (மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், அதிருப்தி முதலியவற்றை) வெளிப்படுத்துதல்.

  ‘நான் தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஆசிரியர் மகிழ்ச்சி தெரிவித்தார்’
  ‘அவர் தன் மகனின் நடத்தைக்காக என்னிடம் வருத்தம் தெரிவித்தார்’