தெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெறி1தெறி2

தெறி1

வினைச்சொல்தெறிக்க, தெறித்து

 • 1

  (நீர்த்துளி, தீப்பொறி முதலியவை) சிதறி விசையுடன் விழுதல்.

  ‘அருவி நீர் பாறை மேல் விழுந்து தெறித்தது’
  ‘சாணைக்கல்லில் கத்தியைத் தீட்டும்போது பொறி தெறித்தது’
  உரு வழக்கு ‘ஆணவம் தெறிக்கும் பேச்சு’
  உரு வழக்கு ‘கனல் தெறிக்கும் வசனம்’

 • 2

  சுண்டி இழுப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.

  ‘வெயிலின்கொடுமையால் நெற்றிப்பொட்டுத் தெறித்தது’
  ‘சீழ் கோத்திருப்பதால் கால் விரல் விண்விண்ணென்று தெறிக்கிறது’

தெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெறி1தெறி2

தெறி2

வினைச்சொல்தெறிக்க, தெறித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (இருவருக்கு இடையில்) சண்டை ஏற்பட்டு உறவு முறிதல்.

  ‘கோயில் பிரச்சினையால் இரண்டு குடும்பங்களுக்கும் தெறித்துவிட்டதாம்’