தெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெளி1தெளி2

தெளி1

வினைச்சொல்தெளிய, தெளிந்து, தெளிக்க, தெளித்து

 • 1

  (திரவத்தில் கலந்துள்ள அழுக்கு, கசடு முதலியவை அடியில் தங்கிவிடுவதால் திரவம்) கலங்கிய நிலையிலிருந்து மாறுதல்.

  ‘கலங்கிய நீரை முதலில் தெளியவை’
  ‘தெளிந்த ரசமாகக் கொஞ்சம் ஊற்று’

 • 2

  (தூக்கம், போதை முதலியவை) நீங்குதல்; முழுதாகச் சுய உணர்வை அடைதல்.

  ‘படுக்கையிலிருந்து எழுந்தவன் தூக்கக் கலக்கம் தெளியாமல் திருதிருவென்று விழித்தான்’
  ‘சாலையில் விழுந்துகிடந்தவனின் மயக்கம் தெளிவதற்காக முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள்’

 • 3

  பேச்சு வழக்கு (மனநிலை பிறழ்ந்தவர்) குணமடைதல்.

  ‘அவருக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டதா?’
  உரு வழக்கு ‘அவனுடைய காதல் பைத்தியம் சீக்கிரம் தெளிந்துவிடும்’

 • 4

  உயர் வழக்கு (சந்தேகம், குழப்பம் முதலியவை நீங்கி ஒன்றை) நன்றாக அறிதல்.

  ‘சான்றுகளைக் கொண்டு எடுத்த முடிவு சரி என்று தெளியலாம்’

தெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெளி1தெளி2

தெளி2

வினைச்சொல்தெளிய, தெளிந்து, தெளிக்க, தெளித்து

 • 1

  (திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால்) பரவலாக விழச் செய்தல்.

  ‘திருமணத்துக்கு வருபவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்பார்கள்’
  ‘வாசலுக்கு நீர் தெளித்துக் கோலம் போடு’
  ‘வயலுக்குப் பூச்சிமருந்து தெளிக்க வேண்டும்’

 • 2

  (வயலில் விதை) விதைத்தல்.

  ‘வயலில் உளுந்து தெளிக்க வேண்டும்’