தமிழ் தெளிவு யின் அர்த்தம்

தெளிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக்கூடிய நிலை.

  ‘வானம் தெளிவாக இருக்கிறது’
  ‘அடுத்த அறையில் அவர் இருந்தாலும் அவர் பேசியது எனக்குத் தெளிவாகக் கேட்டது’
  ‘தெளிவான குரல்’

 • 2

  குழப்பம், சந்தேகம் முதலியவை இல்லாத அல்லது நீங்கிய நிலை.

  ‘இன்றைய இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவாக இருக்கிறார்கள்’
  ‘நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. இன்னும் சற்றுத் தெளிவாக விளக்க முடியுமா?’
  ‘காடுகள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன என்பது தெளிவு’

 • 3

  (களைப்பு, பயம், நோய் முதலியவற்றின் அறிகுறிகள் நீங்கிவிட்ட பின் முகத்தில் தெரியும்) பொலிவு.

  ‘நோயின் ஆபத்தான கட்டம் தாண்டிவிட்டது என்று மருத்துவர் கூறிய பிறகுதான் அவர் முகத்தில் சற்றுத் தெளிவு பிறந்தது’

 • 4

  (ஒன்றுக்கே உரிய) ஒழுங்குமுறை.

  ‘அவன் எந்த வேலையையும் தெளிவாகச் செய்வான்’
  ‘செய்யும் வேலையில் ஒரு தெளிவு வேண்டும் என்று அப்பா கூறினார்’