தமிழ் தெளிவுபடுத்து யின் அர்த்தம்

தெளிவுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு) தெளிவாக விளக்குதல்.

    ‘புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டத்தில் உள்ள குழப்பத்தைத் தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சியினர் வேண்டினர்’
    ‘இந்தத் திட்டத்தினால் மத்தியதர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உயர் அதிகாரி தெளிவுபடுத்தினார்’