தமிழ் தொகுதி யின் அர்த்தம்

தொகுதி

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட அடிப்படையில் ஒன்றாகத் தொகுத்து உருவாக்கப்பட்டது.

  ‘கலைக்களஞ்சியம் முதல் தொகுதி’

 • 2

  (கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றில் பலவற்றை) தொகுத்து வெளியிடப்படும் நூல்; தொகுப்பு.

  ‘என்னுடைய சிறுகதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவரவிருக்கிறது’

 • 3

  சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மக்கள் வாழும் பகுதி.

  ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடும்’

 • 4

  கணிதம்
  பின்னத்தில் கோட்டுக்கு மேல் உள்ள எண்.

  ‘3/2 என்பதில் 3 என்பது தொகுதி’

 • 5

  உயிரியல்
  (உயிரின வகைப்பாட்டில்) ஒத்த வகுப்புகளை உள்ளடக்கிய, பிரிவுகளைவிடச் சிறிய பிரிவு.