வினைச்சொல்
- 1
மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்.
‘கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கினான்’‘புளியங்காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்துத் தொங்கின’‘தோளில் பை தொங்க நடந்து வந்தான்’ - 2
பேச்சு வழக்கு (உதவி கேட்டுத் தொடர்ந்து) கெஞ்சுதல்.
‘பத்து ரூபாய்ப் பணத்துக்காக உன்னிடம் தொங்க வேண்டியிருக்கிறது’‘உனக்காக நான் யாரிடமும் போய்த் தொங்க முடியாது’
பெயரடை
- 1
(சட்டசபை அல்லது மக்களவை குறித்து வரும்போது) தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் எந்தக் கட்சியும் பதவி ஏற்க முடியாத நிலையில் உள்ள.
‘தொங்கு நாடாளுமன்றம்’‘தொங்கு சட்டசபை’