தமிழ் தொடக்கம் யின் அர்த்தம்

தொடக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (காலத்தில்) தொடங்கிய முதல் நிலை; ஆரம்பம்.

  ‘தொடக்கத்திலிருந்தே நான் அவனைக் கவனித்துவருகிறேன்’
  ‘தொடக்கத்தில் வேலை சற்றுச் சிரமமாகத்தான் தோன்றும்’
  ‘கதையின் தொடக்கத்தில் உள்ள விறுவிறுப்பு கடைசிவரை இல்லை’
  ‘திரைப்படத்தின் தொடக்கமே சோகமாக இருந்தது’

 • 2

  ஒரு வேலையின் அடிப்படை நிலை; முதல் கட்டம்.

  ‘தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’