தமிழ் தொடங்கு யின் அர்த்தம்

தொடங்கு

வினைச்சொல்தொடங்க, தொடங்கி

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒரு நிலை) மாற ஆரம்பித்தல்.

  ‘அவன் தன் சோகக் கதையைச் சொல்லத் தொடங்கினான்’
  ‘வெள்ளம் குறையத் தொடங்கிவிட்டது’
  ‘கூட்டம் மெல்லக் கலையத் தொடங்கியது’

 • 2

  (அலுவலகம், பள்ளி முதலியன) (குறிப்பிட்ட நேரத்தில்) செயல்படுதல்/(அவற்றை) செயல்படச் செய்தல்.

  ‘உங்கள் அலுவலகம் எத்தனை மணிக்குத் தொடங்குகிறது?’
  ‘பள்ளிக்கூடத்தை ஏழு மணிக்கே தொடங்க வேண்டுமா?’

 • 3

  (விழா முதலியவற்றின்) முதல் கட்டம் நடைபெறுதல்/முதல் கட்டத்தை நடைபெறச்செய்தல்.

  ‘இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது’
  ‘கூட்டத்தைத் தொடங்கும்போது மணி பத்து’

 • 4

  (நிறுவனம், பத்திரிகை முதலியவற்றைப் புதிதாக) தோற்றுவித்தல்/(அவை) செயல்பட ஆரம்பித்தல்.

  ‘பிரிந்துபோகிற ஒவ்வொருவரும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிவிடுவார்கள் போலிருக்கிறதே!’
  ‘‘எழுத்து’ பத்திரிகை 1959 ஆம் ஆண்டு வெளிவரத் தொடங்கியது’