தமிழ் தொட்டு யின் அர்த்தம்
தொட்டு
இடைச்சொல்
- 1
‘(குறிப்பிடப்படும் காலம்) தொடங்கி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘முதல்’.
‘நீ வந்த நாள்தொட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது’‘இவை பண்டு தொட்டு நிலவிவரும் பழக்கவழக்கங்கள்’ - 2
வட்டார வழக்கு ‘(ஒருவரை அல்லது ஒன்றை) முன்னிட்டு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘காரணமாக’.
‘உன்னைத்தொட்டு அவனை அடிக்காமல் விடுகிறேன்’‘நீ பணம் கேட்டதுதொட்டு அவனும் பணம் கேட்கிறான்’