தமிழ் தொட்டுக்கொள் யின் அர்த்தம்

தொட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (சுவைக்காக உணவோடு ஊறுகாய், சட்னி போன்றவற்றை) சேர்த்து உண்ணுதல்.

    ‘மிளகாய்ப்பொடியைத் தொட்டுக்கொண்டு இட்லி சாப்பிட்டேன்’
    ‘தொட்டுக்கொள்ள ஊறுகாய் இருக்கிறதா?’