தொடர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொடர்1தொடர்2தொடர்3

தொடர்1

வினைச்சொல்தொடர, தொடர்ந்து

 • 1

  (ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல்; நீடித்தல்.

  ‘ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் சண்டை தொடர்வது வருந்தத் தக்கது’
  ‘தொடர்ந்து பெய்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது’

 • 2

  (இடையில் நின்றிருந்தது) மறுபடியும் தொடங்கி மேற்செல்லுதல்/(இடையில் நின்றிருந்ததை) தொடங்கி நீடிக்கச் செய்தல்.

  ‘சாப்பாட்டுக்குப் பிறகும் விவாதம் தொடர்ந்தது’
  ‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்தான்’

 • 3

  (ஒருவரை) விட்டுவிடாமல் பின்செல்லுதல்.

  ‘யாரோ தன்னைத் தொடர்வது போல உணர்ந்தான்’
  ‘நாய் நிழல் போல் அவனைத் தொடர்ந்தது’

தொடர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொடர்1தொடர்2தொடர்3

தொடர்2

வினைச்சொல்தொடர, தொடர்ந்து

 • 1

  (வழக்கு) தொடுத்தல்.

  ‘பத்திரிகைமீது அவர் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்’

தொடர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொடர்1தொடர்2தொடர்3

தொடர்3

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை.

  ‘ராணுவ வாகனத் தொடர் கண்ணிவெடியில் சிக்கியது’

 • 2

  (வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை முதலியவற்றில்) குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு முறை என்று தொடர்ந்து வரும் நிகழ்ச்சி.

  ‘பத்திரிகையில் வந்த கட்டுரைத் தொடர் முடிந்துவிட்டது’

 • 3

  (விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே ஓர் ஆட்டத்தைத் தொடர்ந்து மற்றோர் ஆட்டம் என்ற முறையில் நடைபெறும் போட்டி வரிசை.

  ‘மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது’
  ‘மூட்டு வலி காரணமாக இந்தக் கால்பந்துத் தொடரில் ரொனால்டோ பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது’

 • 4

  குறிப்பிட்ட ஒழுங்கில் அமைந்து பொருள் தரும் சொற்களின் வரிசை.

  ‘தம் கட்டுரையில் பல சங்க இலக்கியத் தொடர்களை ஆசிரியர் எடுத்தாண்டிருக்கிறார்’