தமிழ் தொடர்ச்சி யின் அர்த்தம்

தொடர்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பது.

  ‘இந்த நூலில் பக்கங்கள் தொடர்ச்சியாக இல்லை’
  ‘கதைத் தொடர்ச்சி சரியாக அமையவில்லை’
  ‘மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது’

 • 2

  ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று துவங்கி அமைந்திருப்பது; ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக இருப்பது.

  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’
  ‘தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன’
  ‘தொடர்ச்சியான தேடல்தான் என் எழுத்தின் குறிக்கோள்’

 • 3

  (நடந்து முடிந்த ஒன்றின்) விளைவாக நிகழ்வது.

  ‘தேர்தலின் தொடர்ச்சிதான் போன வாரம் நடந்த கலவரங்கள்’
  ‘மாநாட்டின் தொடர்ச்சியாக ஒரு பேரணி நடந்தது’