தமிழ் தொடர்ந்து யின் அர்த்தம்

தொடர்ந்து

வினையடை

  • 1

    (ஒன்றை) அடுத்து; உடனே.

    ‘விழாவைத் தொடர்ந்து இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது’
    ‘இடிமின்னலைத் தொடர்ந்து பெய்த மழையில் நான்கு வீடுகள் சரிந்தன’
    ‘கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த விருந்தில் நான் கலந்துகொள்ளவில்லை’