தமிழ் தொடர்பு யின் அர்த்தம்

தொடர்பு

பெயர்ச்சொல்

 • 1

  (பிறப்பு, நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும்) உறவு.

  ‘சொத்துத் தகராறினால் அவர்களுக்கிடையே எந்த விதத் தொடர்பும் இல்லாமல் போயிற்று’
  ‘நம் நாடு பல நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது’

 • 2

  பாலுணர்வு அடிப்படையிலான உறவு.

  ‘தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்புவைத்திருக்கிறான் என்பதை அவள் அறிந்துகொண்டாள்’

 • 3

  காரண அடிப்படை உடைய சம்பந்தம்.

  ‘உன் எண்ணத்திற்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாதது போலிருக்கிறதே!’

 • 4

  (தொலைபேசி, மின்சாரம் முதலியவற்றைப் பயன்படுத்தும் வகையில்) இரு இடங்களை இணைப்பது; இணைப்பு.

  ‘புயலால் மின் தொடர்பு அறுந்துபோயிருந்தது’
  ‘தொலைபேசித் தொடர்பு கிடைக்க நேரமாயிற்று’