தமிழ் தொடர்புகொள் யின் அர்த்தம்

தொடர்புகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    தகவல் தருவதற்கான அல்லது பெறுவதற்கான முறையை மேற்கொள்ளுதல்.

    ‘மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன்’
    ‘பேராசிரியரோடு கடிதம்மூலம் தொடர்புகொள்ள முயன்றேன்’
    ‘இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளவும்’