தமிழ் தொடர் ஓட்டம் யின் அர்த்தம்

தொடர் ஓட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    ஓட வேண்டிய தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையை இன்னொருவரிடம் தந்து, அவர் அந்த இடத்திலிருந்து தொடர்ந்து ஓடும் ஓட்டப் பந்தயம்.

    ‘பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம்’

  • 2

    (விளையாட்டுப் போட்டி, விழா முதலியவை தொடங்கும் இடத்துக்கு) ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் ஓடி ஜோதியைக் கொண்டுவருதல்.

    ‘ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குத் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது’