தமிழ் தொண்டு யின் அர்த்தம்

தொண்டு

பெயர்ச்சொல்

 • 1

  தன்னலம் கருதாமல், எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி; சேவை.

  ‘கிராம மக்களுக்குத் தொண்டு செய்ய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்’
  ‘இந்த நூல் அவர் தமிழ் மொழிக்குச் செய்த பெரும் தொண்டு ஆகும்’

 • 2

  கடவுளுக்குச் செய்யும் சேவை.

  ‘நாயன்மார்கள் சிவனுக்குத் தொண்டு செய்வதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள்’