தமிழ் தொண்டையை நனை யின் அர்த்தம்

தொண்டையை நனை

வினைச்சொல்நனைக்க, நனைத்து

  • 1

    (மிகக் குறைந்த அளவிலாவது நீர், பானம் போன்றவற்றை) குடித்தல்.

    ‘வெயிலில் அலைந்துவிட்டு வந்தது களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் இரு, தொண்டையை நனைத்துவிட்டு வருகிறேன்’
    ‘காலையிலிருந்து தொண்டையை நனைக்காமல்கூட அப்படி என்ன வேலை?’