தமிழ் தொய் யின் அர்த்தம்

தொய்

வினைச்சொல்தொய்ய, தொய்ந்து

 • 1

  இறுக்கம் அல்லது விறைப்பு இழந்துவிடுதல்; துவளுதல்; தளர்தல்.

  ‘நிறைய துணிகள் தொங்குவதால் கொடி தொய்ய ஆரம்பித்துவிட்டது’
  ‘விபத்தில் சிக்கியவரை வெளியே எடுத்ததும் அவர் தலை தொய்ந்தது’
  உரு வழக்கு ‘இடைவேளைக்குப் பிறகு படம் தொய்ந்துவிட்டது’

 • 2

  (மனம்) சோர்தல்.

  ‘இத்தனை பேருக்கிடையில் நமக்கு எங்கே வேலை கிடைக்கப்போகிறது என்ற நினைப்பால் அவள் மனம் தொய்ந்தாள்’