தொய்வு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொய்வு1தொய்வு2

தொய்வு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வு.

  ‘கயிற்றைச் சற்றுத் தொய்வாகக் கட்டு’

 • 2

  சுறுசுறுப்பும் வேகமும் இல்லாத நிலை.

  ‘தொய்வு இல்லாத விறுவிறுப்பான படம்’
  ‘தொழில்துறை வளர்ச்சியில் ஒரு தொய்வு’

 • 3

  (மனத்திற்கு ஏற்படும்) சோர்வு.

  ‘சில நேரங்களில் மனத்தில் ஒரு தொய்வு வந்துவிடுகிறது’

தொய்வு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொய்வு1தொய்வு2

தொய்வு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஆஸ்துமா.

  ‘சிறுவயதிலேயே அவனுக்குத் தொய்வு வந்துவிட்டது’
  ‘தொய்வு இருக்கும்போது அவள் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காது’
  ‘தொய்வுக்காரர்களுக்குப் புழுதி கூடாதாம்’