தொற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொற்று1தொற்று2

தொற்று1

வினைச்சொல்தொற்ற, தொற்றி

 • 1

  பாய்ந்து பிடித்தல்.

  ‘குரங்கு கிளையில் தொற்றிக்கொண்டு ஊஞ்சலாடியது’
  ‘எதையோ கண்டு பயந்த குழந்தை அவசரமாக அம்மாவைத் தொற்றிக்கொண்டது’

 • 2

  (பெரும்பாலும் போதல், வருதல், செல்லுதல் போன்றவற்றைக் குறிக்கும் வினைகளுடன் வரும்போது) (ஒரு வாகனத்தில்) வசதியான நிலையில் இல்லாமல் ஒட்டிக்கொள்வதைப் போல ஏறுதல் அல்லது அமர்தல்.

  ‘நண்பனின் சைக்கிளில் தொற்றிக்கொண்டு வந்துவிட்டேன்’
  ‘பேருந்தில் தொற்றிக்கொண்டு பயணம் செய்வதை மாணவர்கள் சாகசமாகக் கருதுகிறார்கள்’

 • 3

  (பயம், கலவர உணர்வு முதலியவை) பற்றுதல்; கவ்வுதல்.

  ‘பயம் அவனைத் தொற்ற, ஓடத் தொடங்கினான்’
  ‘திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை அவரைத் தொற்றிக்கொண்டது’

 • 4

  (நோய் அல்லது பழக்கம் முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுதல்; பீடித்தல்.

  ‘கண் நோய் உனக்குத் தொற்றிக்கொண்டதா?’
  ‘புகைபிடிக்கும் பழக்கம் உனக்கு யாரிடமிருந்து தொற்றியது?’

தொற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொற்று1தொற்று2

தொற்று2

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு.

  ‘திறந்த புண்களில் கிருமித் தொற்று ஏற்படலாம்’