தமிழ் தொழில் யின் அர்த்தம்

தொழில்

பெயர்ச்சொல்

 • 1

  பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை.

  ‘உன் தந்தை என்ன தொழில் செய்கிறார்?’
  ‘மருத்துவத் தொழில்’
  ‘செய்யும் தொழிலைக் குறித்து மரியாதை வேண்டும்’

 • 2

  மனித உழைப்பையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வர்த்தக ரீதியில் ஒரு பொருளை உற்பத்திசெய்யும் செயல் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கும் செயல்.

  ‘மின்னணுத் தொழில்களுக்கு அரசு பல புதிய வரிச் சலுகைகளை அளித்துள்ளது’
  ‘தொலைக்காட்சியின் வருகையினால் திரைப்படத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதா?’

 • 3

  குறிப்பிட்ட வேலையைச் செய்யும் திறமை அல்லது குறிப்பிட்ட வேலையிலுள்ள நுணுக்கம்.

  ‘தொழில் தெரிந்தவர் என்பது அவர் செய்திருக்கும் பெட்டியைப் பார்த்தாலே தெரிகிறது’

 • 4

  உயர் வழக்கு (நிகழ்த்தும்) செயல்.

  ‘படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் இறைவனுக்கு உரியதாகக் கூறப்படும்’