தமிழ் தேங்கு யின் அர்த்தம்

தேங்கு

வினைச்சொல்தேங்க, தேங்கி

 • 1

  (தண்ணீர் போன்றவை ஓடாமல்) தங்குதல்.

  ‘பாதையில் மழை நீர் தேங்கியிருந்தது’

 • 2

  (பொருள்கள் விற்பனையாகாமல், கோப்பு முதலியவை பார்க்கப்படாமல்) சேர்ந்துபோதல்.

  ‘விலையேற்றத்தால் துணிகள் விற்கப்படாமல் தேங்கிவிட்டன’
  ‘அமைச்சரின் உடல்நலக் குறைவால் கோப்புகள் தேங்கிவிட்டன’