தமிழ் தேட்டம் யின் அர்த்தம்

தேட்டம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தேடல்.

  ‘வாழ்க்கையின் அர்த்தத்தை அறிவதே அவரின் தேட்டமாக இருந்தது’

 • 2

  உயர் வழக்கு விருப்பம்; விழைவு.

  ‘சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க நினைத்த அவரின் தேட்டம் நிறைவேறவில்லை’

தமிழ் தேட்டம் யின் அர்த்தம்

தேட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சொத்து.

  ‘உன்னுடைய தேட்டம் எவ்வளவு பெறும்?’
  ‘இவை அனைத்துமே நான் தேடிய தேட்டமேயன்றிப் பரம்பரைத் தேட்டம் அல்ல’
  ‘என்னுடைய தேட்டத்தை நான் விரும்பியவருக்குத்தான் கொடுப்பேன்’